திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (15:30 IST)

விமானத்தில் புகைபிடித்த சம்பவம் : அமைச்சர் விசாரணைக்கு உத்தரவு

மூக வலைதளங்களில் பிரபலமானவர் பாபி கட்டாரியா. இவர் விமானத்தில் புகைப்படத்தை சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

வட நாட்டைச் சேர்ந்தவராக பாபி கிட்டாரியா சமூக வலைதளங்ளில் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

இவரது சமூகவலைதள பக்கங்களை சுமார் 6.30 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

இந்த நிலையில்,இவர், ஸ்பைஸ்ஜெட் என்ற தனியார்  விமானத்தின் இருக்கையில் படுத்தபடி,  சிகரெட் புகைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர்  ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவதது:  விமானத்திற்குள் விதிகளை மீறிப் புகைப்பிடித்த சம்பவம் பற்றி விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, விமானத்தில் புகைப்பிடித்த பாபிகட்டாரியா மீது விரைவில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.