தெலுங்கானா உணவு மட்டும் சாப்பிட மாட்டேன்! ஏன் தெரியுமா? – ராகுல்காந்தி பேச்சு!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த உணவுகள் குறித்து பேசிய ராகுல்காந்தி தெலுங்கானா உணவுகள் பற்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக அவர் சமீபத்தில் நடத்திய பார்த் ஜோடோ யாத்ரா என்ற தேசிய ஒற்றுமை நடைபயணம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜாலியாக பேசிய ராகுல்காந்தி தனக்கு பிடித்த உணவுகள் குறித்தும் பேசினார். அப்போது அவர் “உணவு விஷயத்தில் நான் பிடிவாதம் பிடிக்காமல் கிடைப்பதை சாப்பிடுவேன். ஆனால் பட்டாணி, பலாப்பழம் ஆகியவை எனக்கு பிடிக்காது. ஆனால் அசைவ உணவுகள் பிடிக்கும்.
சிக்கன், மட்டன், கடல் உணவுகள் என்றால் பிரியம். சிக்கன் டிக்கா, கபாப், ஆம்லேட் ஆகியவை பிடிக்கும். தெலுங்கானா உணவுகள் அவ்வளவாக சாப்பிட மாட்டேன். அவை அதிக காரஆக இருக்கும். பெரும்பாலும் வீட்டில் மதிய உணவுக்கு இந்திய உணவுகளே சமைப்பார்கள்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K