கடற்கரையில் குப்பைகளை அகற்றிய மத்திய அமைச்சர்
தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற இயக்கம் சார்பில் நடந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் கடற்கரையை சுத்தம் செய்தனர்.
நாட்டில் 75 வது சுதந்திரம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது., இந்த இதை முன்னிட்டு, தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் 75 நாட்கள் நடைபெறவுள்ளள நிலையில், தமிழகத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளை முன்னிலைப்படுத்தி, 75 கடற்கரைப் பகுதியில் இந்த இயக்கம் சார்பில் தூய்மைப் பனி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இன்று குப்பைகளை அகற்றும் நிகழ்வு நடந்ததது. இதில், மத்திய தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிஜேந்திர சிங் தலைமையில், மாணவர்கள், கலைஞர்கள் , பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கடற்கரையைச் சுத்தம் செய்தனர்.