வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (11:19 IST)

ரயில் தண்டவாளத்தில் பாம்பு மாத்திரை கொளுத்திய யூடியூபர்! அதிரடி நடவடிக்கை..!

ரயில் தண்டவாளத்தில் பாம்பு மாத்திரையை கொளுத்தி அதை வீடியோவாக எடுத்து யூட்யூபில் வெளியிட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
தீபாவளி என்றாலே பட்டாசுகள் வெடிக்கப்படும் என்றும் அதில் ஒன்று பாம்பு மாத்திரை என்பது தெரிந்ததே. ஆனால் சிலர் கோமாளித்தனமாக பட்டாசு வெடிக்கும் வீடியோவை வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே தண்ட்ரா என்ற ரயில் நிலைய தண்டவாளத்தில் யூடியூபர் ஒருவர் பாம்பு மாத்திரைகளை கொளுத்தி அதனை வீடியோ எடுத்துள்ளார். இதுபோன்ற செயல்கள் ரயில் விபத்துக்கு வழிவகைக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ரயில்வே பாதுகாப்பு படை இது குறித்து உடனடியாக விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதையடுத்து சம்பந்தப்பட்ட யூடியூபர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva