வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2023 (19:22 IST)

கார் விற்ற பணத்தில் HIV -ல் பாதித்த குழந்தைளுக்கு உதவிய பிரபல யூடியூபர்

aarif rahman
சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஆரிப் ரஹ்மான் தன் காரை விற்ற பணத்தில் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு புத்தாடைகள் வழங்கியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஆரிப் ரஹ்மான். இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான காரை விற்று  ஹெச்.ஐ.வி தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என 350 பேருக்கு தீபாவளிக்கான புதிய ஆடைகள் வழங்கியுள்ளார்.

மேலும், அரசின் அனுமதியுடன்  2 குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவரது சேவையை அரசு மருத்துவமர்கள் உள்ளிட பலரும் பாராட்டி வருகின்றனர்.