1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:30 IST)

பெட்ரோலால் பைக்கை குளிப்பாட்டிய இளைஞர்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக விபரீத செயல்..!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக இளைஞர்கள் பலர் கிறுக்குத்தனமான செயல்களை செய்து வருகின்றனர் என்பதும் இதனால் பல விபரீதங்கள் ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் பெட்ரோல் நிலையத்தில் தனது பைக்கை பெட்ரோலால் குளிப்பாட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரோஹா என்ற பகுதிக்கு தனது பைக்கில் பெட்ரோல் நிரப்ப வந்த இளைஞர் திடீரென பெட்ரோல் நிரப்பும் ஊழியரிடமிருந்து பிடுங்கி தனது பைக்கை பெட்ரோலால் குளிப்பாட்டினார். 
 
இதனை அவரது நண்பர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக அவர் இந்த விபரீத செயலை செய்தது தெரியவந்தது. 
 
இதனை அடுத்து பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva