ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (21:42 IST)

ராயல் என்ஃபீல்டு பைக்கை பெட்ரோலில் குளிப்பாட்டிய வாலிபர் கைது...

byke petrol bath
உலகம் முழுவதும் இன்றைய சூழலில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை அனைவருக்கும் சமூக வலைதளங்கள் பயன்பாடு, அதில் உள்ள ரீல்ஸ் ஆகியவற்றி தங்கள் திறமைகள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரீல்ஸ் ஆசையில் ஐபோன் வாங்குவதற்காக  மேற்குவங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த ஷதி, ஜெயதேவ் தம்பதியர்,  தங்களின் 8 மாதக் குழதையை விற்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சமூகவலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸில் அதிக லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காக  ஒரு இளைஞர் அம்ரோஹோ பகுதில் உள்ளா பெட்ரோல் பங்கில் தனது ராயல் என்ஃபீல்ட் பைக்கை பெட்ரோலில் குளிப்பாட்டியுள்ளார்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.