வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (17:14 IST)

டெல்லியில் இளைஞர் படுகொலை- 3 பேர் கைது!

டெல்லியின் பதர்பூரில்  நேற்றிரவு 30 வயது வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியன் படர்பூரின் தாஜ்பூர் பஹாடி என்ற பகுதியில் நேற்றிரவு 30 வயது மதிக்கத்தக்க கேசவ் என்ற இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு 3 பேர் கொண்ட  நபர்கள் தப்பியோடினர்.

அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில்,  கைது செய்யப்பட்ட 3 பேரில் கோஹினூர் மற்றும் விக்கி ஆகிய  இருவரும் பட குற்ற சம்பங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், 3 வது  நபர் ஒரு மைனர் சிறுவன் என்று போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

Edited By Sinoj