திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (18:32 IST)

டெல்லியில் பள்ளி சிறுமி மீது ஆசிட் வீச்சு...

acid
டெல்லி துவாரகா என்ற பகுதியில் 17 வயது சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியனில் உள்ள துவாரகா என்ற பகுதியில் இன்று காலை 9 மணிக்கு 17 வயது பள்ளி சிறுமி ஒருவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு சக்கரவாகனத்தில் வந்த 2 பேர் சிறுமியின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டனர்.

இதில், சிறுமியின் முகம், கண்கள்  பாதிக்கப்பட்டு, அவரது வலியால் துடித்துள்ளார், தற்போது ஆபத்தான  நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில்,ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited By Sinoj