வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (15:43 IST)

தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்க ரூ.5 கோடி நிதி வழங்கிய முதல்வர் முக.ஸ்டாலின்

chess stalin
ஜவஹர்லலால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்க ரூ.5 கோடி  நிதியை முதல்வர் முக.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்க ரூ. 5 கோடி  நிதிக்கான காசோலை, வாழும் தமிழறிஞர்கள் மூன்றுபேரின்   நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்காக நூலுரிமைத் தொகையும்,  ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமைஆக்கப்பட்ட மரபுரிமை   நூலுரிமைத்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

மேலும், 2021 ஆம் ஆண்டு தமிழ்ச் செம்மம் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்கள் விருதுகள் 10 நபர்களுக்கும் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு, தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி ம்ற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் வளார்ச்சி இயக்குனர்  ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.