வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (22:29 IST)

டெல்லி எய்ம்ஸ் சர்வர்கள் முடக்கப்பட்டதின் பின்னணியில் சீன ஹேக்கர்கள்..!

hackers
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் சமீபத்தில் முடக்கப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் சீன ஹேக்கர்கள் இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இது குறித்து தெரிவித்த போது மொத்தம் உள்ள 100 சர்வரில் தற்போது 5 சர்வரில் உள்ள தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது சீனாவின் திட்டமிட்ட சதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த மாதம் 23ஆம் தேதி அதிநவீன சைபர் தாக்குதல் டெல்லி எய்ம்ஸ் சர்வர் மீது நடத்தப்பட்டதாகவும் இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran