வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (09:23 IST)

முத்தமா கேக்குது முத்தம்? தூக்கி போட்டு ஒரே மிதி.. காட்டு பகுதியில் அசம்பாவிதம்

பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் யானைக்கு முத்தம் கொடுக்க ஆசைப்பட்டு இப்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். 
 
ஆம், பெங்களூருவை சேர்ந்த 24 வயது மதிக்கதக்க ராஜூ என்னும் இளைஞர் படத்தில் யானை முத்தம் த்ரும் காட்சி ஒன்றை பார்த்துவிட்டு தானும் யானைக்கு முத்தம் தர வேண்டும் என ஆசைப்பட்டார். 
 
இதனால், ஃபுல் போதையில் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். காட்டுப்பகுதியில் யானை கூட்டத்தையும் கண்டுள்ளனர். 
 
யானைகளை கண்டதும் குஷியான ராஜு உடனை அதனை நோக்கி சென்றுள்ளார். அவனது நண்பர்கள் தடுத்தும் போதை தலைக்கேறியதால் யானைக்கு முத்தம் கொடுத்தே தீருவேன் என சென்றுள்ளார். 
 
யானைகளுக்கு அருகே சென்று முத்தம் கொடுக்க யானைகள் அவனை பந்தாடியது. தூக்கி வீசப்பட்ட ராஜு மரத்தின் மீது மோதி ரத்த வெள்ளத்தில் கிழே விழுந்தார். பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது உயிருக்கு போராடி வருகிறார்.