திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (20:26 IST)

பாலியல் சீண்டல்: 34 மாணவிகள் மீது கொடூர தாக்குதல் - பீகாரில் அதிர்ச்சி

பீகாரில் பள்ளி மாணவிகள் 34 பேரை வாலிபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பீகாரின் திரிவேணிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் பள்ளிக்கூடத்தில் படித்துவரும் பள்ளி மாணவிகள் சிலரிடம் அப்பகுதியில் உள்ள சில இளைஞர்கள் பாலியல் ரீதியாக வம்பிழுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் புகார் அளித்த போதிலும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை

பொறுத்து பொறுத்து பார்த்த மாணவிகள், அந்த இளைஞர்களை தாக்கியுள்ளனர்.

இதனால் கடும் கோபமடைந்த அந்த இளைஞர்கள், கூட்டாக சேர்ந்து மாணவிகளை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
 
இவர்களின் கொடூர தாக்குதலால் 34 மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மாணவிகளை தாக்கிய இளைஞர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.