வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (08:03 IST)

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. மஞ்சள் எச்சரிக்கை அறிவித்த வானிலை மையம்..!

கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க  கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் அக்.3ம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
மேலும் அடுத்த 3-4 நாட்களுக்கு ஒடிசாவுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva