1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (17:11 IST)

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை..!

சென்னையில் இன்னும் மூன்று மணி நேரத்தில்  மிதமான மழை முதல் கன மழை வரை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக இன்று காலை  தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
சென்னையில் உள்ள பல பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva