யார் தடுத்தாலும் மேகதாது அணையை கட்டுவோம்! – எடியூரப்பா உறுதி!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (16:25 IST)
கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அணை கட்டுவது உறுதி என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேகதாட்டு அணை கட்டும் முயற்சிகளை கைவிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியது கர்நாடகாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா “அணை கட்டும் பணியை இணக்கமாக நடத்தவே தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அணை விவகாரத்தில் சட்டமும் சாதகமாகவே உள்ளது” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :