நடிகர் தனுஷுடன் கைகோர்த்த தேசிய விருது இயக்குநர் !

sinoj| Last Modified சனி, 3 ஜூலை 2021 (19:37 IST)


நடிகர் தனுஷை தேசிய விருது இயக்குநர் சந்தித்துப் பேசியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கர்ணன், ஜகமேதந்திரம். இப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ’நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு யுவன்
சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கார்த்திக் நரேன் படத்தில் தனுஷ் பிஷியாக நடித்து வருகிறார். இதர்கான படப்பிடிப்பு ஹதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலா, நடிகர் தனுஷை சந்தித்துப் பேசியுள்ளார். அதில் இருவரும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது., இப்படம் பான் இந்தியா படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் தனுஷ் நடிப்பில் இப்படம் அதிகப் பொருட்செலவில் உருவாகும் படமெனக் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :