தொடர்புடைய செய்திகள்
- எத்தனையாவது அலை வந்தாலும் எதிர்க்கும் வலு உள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- 18.42 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தின் 6முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- நடிகர் தனுஷுடன் கைகோர்த்த தேசிய விருது இயக்குநர் !
- சைகோவ்-டி தடுப்பு மருந்து: கொரோனாவுக்கு எதிரான முதல் டி.என்.ஏ. தடுப்பு மருந்து!
அக்டோபரில் உச்சம் தொடும் மூன்றாவது அலை? – விஞ்ஞான குழு எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அக்டோபரில் மூன்றாவது அலை உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக தினசரி 4 லட்சம் பாதிப்புகள் என பதிவான நிலையில் தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே கணிப்பதற்காக மத்திய அரசு அமைத்த 3 பேர் கொண்ட விஞ்ஞான குழு தெரிவித்துள்ள தகவலில் இந்தியாவில் மூன்றாவது அலை கொரோனா பரவினால் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் உச்சமடையும் என தெரிவித்துள்ளது.
போதிய கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் பாதிப்பு தினசரி அளவு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலும், உச்சமடையும்போது 2 லட்சம் வரையிலும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
