செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (14:53 IST)

முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா! – கர்நாடகாவில் அதிர்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த ஆண்டை காட்டிலும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை விதித்து வந்தாலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும் முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.