வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (15:57 IST)

டோல்கேட் ஊழியரின் கன்னத்தின் அறைந்த WWE தி கிரேட் காளி? வைரல் வீடியோ

பிரபல WWE குத்துச்சண்டை வீரரான தி கிரேட் காளி டோல்கேட் ஊழியரின் கன்னத்தில் அறைந்த சம்பவம்  சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு WWE என்ற குத்துச்சண்டை ஆகும். இந்த விளையாட்டியில் பஞ்சாபை நேர்த்த தி கிரேட் காளி விளையாடி, அதிக ரசிகர்களைப் பெற்றார்.

இந்த நிலையில்,  பஞ்சாப் மாநிலம், பில்லூர் அருகே தலிப் ராணா  சுங்கச்சாவடியில் ஊழியரின் கன்னத்தில் அவர் அறைந்த்தாக்க் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து லூதியானா போலீஸார் கூறும்போது, இந்தச் சம்பவம் குறித்து எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

மேலும், தி கிரேட் காளி ஜலந்தரில் இருந்து கர்னாலுக்கு சென்று கொண்டிருக்கும்போது, சுங்கச்சாவடி ஊழியர்கள் அவருடன் செல்ஃபிஎடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுக்கவே, ஊழியர்கள் அவரிடம் தவறாக நடந்துள்ளதாக காளி தெரிவித்துள்ளார்.