1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (22:13 IST)

சூதாட்டத்திற்காக போலி ஐபிஎல் தொடர்களை நடத்தியவர்கள் கைது! போலீஸார் அதிரடி

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு என உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டிற்கான( 2022) ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடிய நிலையில், குஜராத் அணி பங்கேற்ற முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்றது.

இந்த  நிலையில், ஐபிஎல் தொடரை குஜராத்தில் போலியாக உருவாக்கிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதன்படி, குஜராத் மாநிலம் மோலிபூர் கிராமத்தில் மொத்தம் 21 பேர் ஐபிஎல் தொடரை போலியாக நடத்தியுள்ளனர். மேலும், சென்னை கிங்ஸ், குஜராத், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை ஜெர்ஸியை அனிந்து அவர்கள் இத்தொடரை நட்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் போலி ஐபிஎல் தொடருக்கு காரணமாக நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  மேலும், இப்போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பி அதன் மூலம் ரஷ்ய சூதாட்டக்காரர்களிடம் பந்தயம் கட்டியுள்ளதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.