செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (09:04 IST)

ஆன்லைனில் வந்த ஆணுறை; கைக்கடிகாரம் ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி!

கேரளாவில் ஆன்லைனில் கடிகாரம் ஆர்டர் செய்தவருக்கு தண்ணீர் நிரப்பிய ஆணுறைகளை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் தட்டாங்குளத்தை சேர்ந்த அணில்குமார் என்பவர் சமீபத்தில் ஆன்லைன் விற்பனை தளம் ஒன்றில் கைக்கடிகாரம் ஒன்றை பார்த்துள்ளார். அதை வாங்குவதற்காக ஆர்டர் செய்த அவர் கடிகாரத்திற்காக ரூ.2500 ம் செலுத்தியுள்ளார்.

அவருக்கு பார்சல் டெலிவரி ஆன நிலையில் அதை பிரித்து பார்த்தபோது அதில் தண்ணீர் நிரப்பிட ஆணுறைகள் இருந்தது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து டெலிவரி நபரிடம் அவர் சண்டை போட்டுள்ளார். ஆனால் தனக்கு அதுபற்றி ஏதும் தெரியாது என அவர் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தும் சரியான பதில் இல்லாததால் அணில்குமார் தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.