ஆன்லைன் திருமணம்: செல்போனில் தோன்றிய மணமகளுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
தற்போது உலகமே ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் செல்போனில் தோன்றிய மணமகளுக்கு தாலி கட்டிய மணமகள் ஒருவரின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நிர்மல் என்பவர் நியூசிலாந்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். கேரளாவிலேயே ஒரு நல்ல பெண்ணை பார்த்து நிச்சயம் செய்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இதனால் நிர்மல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த நிலையில் ஆன்லைன் மூலம் திருமணம் செய்ய இரு தரப்பினர் முடிவு செய்தனர்
இதனை அடுத்து வீடியோகால் மூலம் செல்போனில் தோன்றிய மணமகளுக்கு நிர்மல் தாலி கட்டினார். இதையடுத்து இரு குடும்பத்தாரும் அலுவலகம் சென்று இந்த திருமணத்தை பதிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு சில மாதங்களில் நியூஸிலாந்தில் இருந்து நிர்மல் திரும்பிய பின்னர் இருவரும் மணவாழ்க்கையில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது