வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (07:21 IST)

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நிறுத்தம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
நேற்று மல்யுத்த வீராங்கனைகளின் பிரதிநிதிகள் அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். 
 
பிரிஜ் பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக ஜூன் 15ஆம் தேதிக்குள் காவல்துறை விசாரணையை முடிக்கும் என்று அரசு உறுதி அளித்துள்ளதாகவும் அதனால் எங்கள் போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டதை நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்றும் எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்ப பெறப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva