திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 31 மே 2023 (09:55 IST)

போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு உறுதுணையாக நிற்போம்! – உலக மல்யுத்த அமைப்பு!

Wrestlers protest
பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்போம் என உலக மல்யுத்த அமைப்பு தெரிவித்துள்ளது.



பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மௌனத்தில் தலைவருமாக இருந்து வருபவர் பிரிஜ்பூஷண் சரண்சிங். இவர்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து விருது பெற்ற பல மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின்போது மல்யுத்த வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில் நீதி கேட்டு போராடி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக உலக மல்யுத்த அமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாலியல் புகார் அளிக்கப்பட்ட பிரிஜ்பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், பிரிஜ்பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ள உலக மல்யுத்த அமைப்பு, தாங்கள் என்றும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக துணை நிற்போம் என தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K