ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (10:49 IST)

மோசமான டிரைவர்கள் அதிகம் உள்ள நாடு! – இந்தியாவுக்கு எந்த இடம்?

traffic
உலக நாடுகளில் மோசமாக வாகனங்களை ஓட்டு டிரைவர்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் போக்குவரத்திற்கான வாகனங்கள் அத்தியாவசியமானதாக மாறியுள்ளன. சின்னஞ்சிறு கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி வருகிறது. ஆரம்பத்தில் வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் இருப்பதே அரிதாக இருந்த நிலையில் தற்போது ஆளுக்கு ஒரு இருசக்கர வாகனம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சில ஐரோப்பிய நாடுகளில் பல குடும்பங்கள் நபருக்கு ஒரு கார் வைத்திருக்கிறார்களாம். இதுபோன்று தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல், பொது போக்குவரத்து, தொழிற்சாலைகளுக்கான கனரக வாகனங்கள் என நாள்தோறும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

முன் அனுபவமற்ற அல்லது அஜாக்கிரதையான ஓட்டுனர்களால் நாள்தோறும் உலகம் முழுவதும் ஏராளமான வாகன விபத்துகளும், உயிர்பலிகளும் ஏற்படுகின்றன. ’கம்பேர் தி மார்கெட்’ என்ற காப்பீடு நிறுவனம் உலகிலேயே மோசமான ஓட்டுனர்களை கொண்ட நாடுகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி வாகன விபத்துகள், அதற்கான காரணங்கள், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் ஆகியவற்றை கணக்கிட்டு மோசமான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் மோசமான வாகன ஓட்டுனர்களை கொண்ட நாடாக தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் மோசமான ஓட்டுனர்களை கொண்ட நாடாக இந்தியா 4வது இடத்தில் உள்ளது. அதேபோல சிறந்த ஓட்டுனர்கள் கொண்ட நாடுகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் ஜப்பானும், இரண்டாவது இடத்தில் நார்வேயும் உள்ளன.

Edit by Prasanth.K