1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (08:26 IST)

3 ஆண்டுகளாக வீட்டை பூட்டி 10 வயது மகனுடன் வாழ்ந்த பெண் மீட்பு.. அதிர்ச்சி காரணம்..!

Lock
மூன்று ஆண்டுகளாக வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு வாழ்ந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பத்து வயது மகனுடன் மூன்று ஆண்டுகளாக பூட்டிய வீட்டுக்குள் வாழ்ந்ததாக அவர் கணவர் தகவல் கொடுத்த நிலையில் அந்த பெண் மற்றும் 10 வயது குழந்தை மீட்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் கொரோனா வந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டை உள் பக்கமாக போட்டுக் கொண்டார். அவரது கணவர் அலுவலகத்திலிருந்து வந்தபோது கூட அவர் கதவை திறக்கவில்லை. இதனை அடுத்து அவரது கணவர் அருகில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து தினந்தோறும் தனது மனைவி மற்றும் மகனுக்கு தேவையான பொருட்களை வாங்கி கதவருகில் வைத்து விட்டு செல்வாராம். அந்த பொருளை எடுக்க மட்டும் கதவை திறக்கும் அந்த பெண் அதன் பிறகு கதவை திறப்பதில்லை என்று கூறப்படுகிறது. கேஸ் சிலிண்டர் கூட வாங்காமல் இன்டக்சன் ஸ்டவ் பயன்படுத்தி கலந்த மூன்று ஆண்டுக்காக அவர் சமையல் செய்துள்ளார். மகனை பள்ளிக்கு அனுப்பாமல் ஆன்லைன் மூலம் மட்டுமே கல்வி கற்க அவர் அறிவுறுத்தியுள்ளார். 
 
இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக வீட்டுக்கு வாழ்ந்த அந்த பெண் குறித்து அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
உடனடியாக காவல்துறையினர் சுகாதார அதிகாரிகளுடன் சென்று பூட்டிய வீட்டை வீட்டின் கதவை உடைத்து அந்த பெண் மற்றும் 10 வயது சிறுவனை மீட்டனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கிவிட்டது என்று அவருக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் கவுன்சிலிங் கொடுத்ததை அடுத்து அந்த பெண் சமாதானம் அடைந்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Siva