வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 அக்டோபர் 2021 (08:47 IST)

முடிவுக்கு வந்தது வொர்க் ஃப்ரம் ஹோம்: ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் டிசிஎஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு நிபந்தனைகள் அரசு விதிக்கப்பட்டதன் காரணமாக டிசிஎஸ் உள்பட பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறைக்கு அனுமதி அளித்தது
 
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து மீண்டும் அலுவலகத்திற்கு டிசிஎஸ் நிறுவனம் அழைத்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
நவம்பர் 15 முதல் இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் மட்டுமின்றி ஹெச்.சி.எல், உள்பட பல ஐடி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.