1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது: அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக தற்போது இருக்கும் நிலையில் அது 60 ஆக உயர்த்தப்படும் என திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த வாக்குறுதியை ஏற்கனவே திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஐம்பத்தி ஒன்பது இருந்து 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் அதுகுறித்த திருத்தப்பட்ட அரசாணையை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 
 
இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்கள் 60 வயதை அடைந்த அடுத்த நாளே ஓய்வூதியர்களாக கருதப்படுவார்கள் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட ஓய்வு பெறும் வயதை நீடித்துள்ளதால் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என ஒரு தரப்பினர் இந்த முடி அரசின் இந்த முடிவை தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது