29 பேரை கர்ப்பமாக்கிய WHO ஊழியர்கள்: காங்கோ வெடித்த சர்ச்சை
காங்கோவில் உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் காங்கோ நாட்டில் போலோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பணியமர்த்தப்பட்டு அங்கு இருந்து வந்தனர். அதில் சிலர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதியை சேர்ந்த 29 பேர் கர்ப்பமான நிலையில், பலர் கரு கலைப்புச் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் வருத்தம் தெரிவித்துள்ளார்.