டார்ச் வெளிச்சத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சை: வைரல் வீடியோ
மின்சாரம் இல்லாததால் டார்ச் வெளிச்சத்தில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்த சம்பவம் ஒன்று பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் நேற்று இரவு ஒரு பெண் கையில் அடிப்பட்டதற்காக மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது மருத்துவமனையில் மின்சாரம் இல்லை. இதனால் அங்கிருந்த பெண் ஒருவர் டார்ச் அடித்துள்ளார். அந்த டார்ச் வெளிச்சத்தில் ஒரு நபர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தபோது, அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஜெனரேட்டர் வசதி இல்லாததால் இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகியுள்ளது.