மருத்துவமனையில் இருந்து பஸ்ஸில் வீட்டுக்குச் சென்ற விஜய்
விஜய் பிறந்ததும், ஆட்டோவில் செல்லக்கூட காசு இல்லாமல் விஜய்யை பஸ்ஸில் கொண்டு சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘விஜய் ஜெயித்த கதை’ என்ற புத்தகத்தை பத்திரிகையாளர் சபீதா ஜோசப் எழுதியுள்ளார். அவர் ஒரு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், விஜய்யின் பிறப்பு பற்றி சொல்லியிருக்கிறார்.
“எக்மோரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தான் விஜய் பிறந்தார். அவர் பிறந்த பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்ல ஆட்டோ ரிக்ஷாவுக்கு காசு இல்லாததால், பஸ்ஸிலேயே கொண்டு சென்றிருக்கிறார் ஷோபா. அப்போது அவர்கள் வீட்டில் கட்டில், மெத்தை போன்ற எந்த வசதியும் இல்லை. எனவே, தன்னுடைய துணிகளையே ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி மெத்தை போல செய்து, அதில் விஜய்யைப் படுக்க வைத்திருக்கிறார் ஷோபா.
விஜய் குழந்தைகள் வேண்டுமானால் இன்றைக்கு வசதியான வழியில் பிறந்திருக்கலாம். ஆனால், விஜய்யின் பிறப்பு கஷ்டம் நிறைந்தது” என அவர் தெரிவித்துள்ளார். அதனால் தான், தன்னுடைய பிறந்த நாளன்று எக்மோர் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் பரிசளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய்.