1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (16:32 IST)

ஐசியு-வில் இருந்த பெண்ணுக்கு மாந்த்ரீகம்: மருத்துவமனையில் பரபரப்பு!

புனேவில் தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு மாந்த்ரீகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
புனேவை சேர்ந்த சந்தியா என்பவர் மார்பக புற்றிநோயால் பதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 
 
அங்கு, மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் அவரது உடல்நிலை மிக மோசமான காரணத்தினாலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை தேரவில்லை. இதனால், உறவினர்கள் மருத்துவரிடம் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
 
எனவே, சந்தியாவின் உடல்நிலை குணமாக மருத்துவர் மந்திரவாதி ஒருவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கே அழைத்துவந்து மந்திரித்துள்ளார். இதுவழக்கமாக நடிக்க சந்தியா ஒரு கட்டத்தில் மரணமடைந்தார். இதனால், மருத்துவரும், அந்த மாந்த்ரீகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.