1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (18:45 IST)

4வது மனைவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற கணவன்!

மத்திய பிரதேசத்தில் கணவன் தனது நான்காவது மனைவியை பலாத்காரம் செய்துவிட்டு கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பையும் அந்த பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
மத்திய பிரதேசம், சாகோரி மாவட்டத்தில் 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வாடகை வீட்டில் ஆணுடன் குடும்பம் நடத்தி வந்து உள்ளார். இந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
 
எனவே, அந்த பகுதிவாசிகள் போலீஸுக்கு புகார் அளித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வீட்டில் கதவை உடைத்து பார்த்த போது, அந்த பெண்ணின் உடல் நிர்வாணமாக அழுகிய நிலையில் கிடந்துள்ளது. 
 
போலீஸார் துவங்கிய முதல் கட்ட விசாரணையில், அந்த பெண் 3 நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும். தலையில் காயம் இருந்ததால், தலையை மோதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் யூகித்தனர். 
 
பின்னர், பிரேதபரிசோதனையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும், அவரது பிறப்புறுப்பில் 2 பீர் டின்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக நடத்திய விசாரணையில், அந்த ஆண் நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அந்த பெண் அந்த நபருக்கு நான்காவது மனைவி என கூறப்படுகிறது. அவரது முதல் இரண்டு மனைவிகள் அவரை விட்டுவிட்டு ஓடி விட்டதாவவும், மூன்றாவது மனைவி மர்மமான முறையில் இறந்துவிட்டார் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.