செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (13:05 IST)

குழந்தைப் பேறு இல்லாத பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் பரிசு.. பீகாரில் ஒரு நூதன மோசடி..!

குழந்தை பேறு இல்லாத பெண்களை கருவுற செய்ய உதவினால் 13 லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என நூதன முறையில் மோசடி செய்த ஒரு கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.

பீகார் மாநிலத்தில் குழந்தை பேறு இல்லாத பெண்களை கருவுற செய்ய வேண்டும் என்றும் அதற்கு உதவி செய்தால் லட்சக்கணக்கில் பணம் தருவதாகவும் தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.’

 இந்த நிறுவனத்திடம் இருந்து ஆண்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவலை அனுப்பி கருவுற முடியாத பெண்களை கருவுற செய்ய வேண்டும் என்று கூறி அதற்கு பதிவு கட்டணமாக ரூ.799 வசூல் செய்துள்ளனர்.

அதன்பின்னர் சில பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பிடித்தவர்களை தேர்வு செய்யும்மாறும் கூறியுள்ளனர். ஆண்கள் ஏதாவது ஒரு பெண்ணை தேர்வு செய்த பின் செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் கூறி ஆயிரக்கணக்கில் வசூல் செய்துள்ளனர். பெண்களை கருவுற செய்ய செய்யும் வேலை என்பதால்  சில ஆண்கள் ஆசைப்பட்டு டெபாசிட் பணம் கட்டியுள்ளனர்.  

சம்பந்தப்பட்ட பெண் கருவுற்றால் 13 லட்சம் வரை பரிசு கிடைக்கும் என்றும் கருவுறவில்லை என்றாலும் ஆறுதல் பரிசாக 5 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியதை அடுத்து பல ஆண்கள் டெபாசிட் கட்டியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த குறித்து மோசடி புகார் எழுந்ததால் போலீசார் அதிரடியாக அந்த நிறுவனத்தில் சென்று விசாரித்த போது அது மோசடி நிறுவனம் என்று தெரியவந்துள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தினர் அனைவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva