1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (11:10 IST)

ரூ.1000 பொங்கல் பரிசு பணம்.. நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்! – முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.



ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வழங்குவது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது புத்தாண்டு தொடங்கும் நிலையில் இப்போதே பொங்கல் பரிசு பணம் வழங்குவதற்கான செயல்பாடுகளில் புதுச்சேரி அரசு இறங்கியுள்ளது. அதன்படி அனைத்து சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் 1 லட்சத்து 30 ஆயிரத்து 791 ரேசன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என புதுச்சேரி அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அந்த செய்தி குறிப்பில் சிவப்பு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500, இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பொங்கல் பரிசு பணம் நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K