புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (18:25 IST)

சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு...ரசிகர்களுக்கு நன்றி கூறிய நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் மலையாள சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின்னர், தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் ஹீரோயினாக  அறிமுகமானார்.

அதன்பின்னர், கஜினி, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி, விஜயுடன் இணைந்து சிவகாசி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

கடந்தாண்டு இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகைத் தாய் மூலம் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் படடம் சூப்பர் ஹிட்டானது.

சினிமாவில்  நடிப்பது மட்டுமின்றி, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு தொழிலதிபராக உள்ளார்.

இந்த நிலையில், சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நயன்தாராவுக்கு ரசிகர்கள், சினிமாத்துறையினர் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றானர்.
 
nayanthara

இதுகுறித்து நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  ‘’ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் இந்தக் கடிதம். நான் சினிமாவில் 20 ஆண்டுகள் நிலைத்து  நிற்பதற்கு நீங்கள்தான் காரணம்.    நீங்கள் அளித்த உத்வேகத்தினால் தான் நான் கீழே விருந்தாலும் மேல எழ காரணமாக அமைந்தது.  நீங்களின்றி இப்பயணம் முழுமையடையாது. என் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் நீங்களே காரணம்….உங்களின் ஆதரவினால்தான் 20 ஆண்டுளாக நான் வெற்றியை நான் கொண்டாட காரணம் என்று  நெகிழ்ச்சியுடன் ‘’தெரிவித்துள்ளார்.