ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:16 IST)

வணிகரிடம் பணம் பறித்து மோசடி செய்த பெண் காவலர்… நீதிமன்றக் காவல்!

மதுரையைச் சேர்ந்த பெண் காவலர் வசந்தி என்பவர் வணிகர் ஒருவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் பறித்து மோசடி செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் வசந்தி, இளையான்குடியைச் சேர்ந்த வணிகர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து அந்த நபர் புகார் கொடுக்கவே வசந்தி தலைமறைவானார். இதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் ஒரு நாள் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.