1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (12:29 IST)

மே 3 வரை ஊரடங்கு என பிரதமர் அறிவிக்க என்ன காரணம்? புதிய தகவல்

மே 3 வரை ஊரடங்கு என பிரதமர் அறிவிக்க என்ன காரணம்?
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என ஏற்கனவே அறிவித்துள்ளது என்பதும், பஞ்சாப் மாநிலம் மற்றும் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவித்தார். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி மற்றும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என அறிவித்தது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு அடுத்த நாள் மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் ஏற்கனவே அரசு விடுமுறை தினம் என்பதும், அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல மே 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களும் சனி ஞாயிறு என்பதால் அந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதன் காரணமாகத்தான் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மே 3ம் தேதிக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து விட்டால் மே 4ஆம் தேதி முதல் அலுவலகம் செல்லும் வகையில் இயல்பு நிலை திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது