புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (10:35 IST)

ஏப்ரல் 20 முதல் சில பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும்! மோடி அறிவிப்பு !

சற்று முன்னர் வீடியோ மூலம் பேசிய மோடி ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு இன்றோடு முடிய இருக்கிறது. இந்நிலையில் சற்று முன்னர் வீடியோ மூலம் பேசிய மோடி மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் அவரது பேச்சில் ‘இந்திய மக்கள் அனைவரும் போர்வீரர்களாக மாறி கொரோனாவுக்கு எதிரானப் போரில் செயல்பட்டு வருகின்றனர்.  நமது செயல்பாட்டை மற்ற நாடுகள் பாராட்டியுள்ளன. இதில் பலரும் சிரமங்களை அனுபவிக்கின்றனர் என்பதை நான் அறிவேன். வேறு எதையும் விட இந்திய மக்களின் உயிரே முக்கியம் என்ற விதத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. மாநில அரசுகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சுகாதார நிலை உஷார் நிலையில் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது. ஊரடங்கை நீட்டிப்பது என ஏற்கனவே பல மாநிலங்கள் முடிவெடுத்துவிட்டன.

இதனால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதற்கு மக்கள் உரிய பங்களிப்பினை அளிக்க வேண்டும். ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில அத்தியாவசியப் பணிகளுக்காக விலக்கு அளிக்கப்படும். அது குறித்த விவரம் நாளை வெளியாகும். மூத்தவர்களை மக்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்துவைத்துகொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக செயல்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.