1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (18:30 IST)

ராஜபக்சே கோரிக்கையை ஏற்று வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லையா? அதிர்ச்சி தகவல்

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற குற்றச்சாட்டில் ஐநாவில் இன்று தீர்மானம் இயற்றப்பட்டது இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்தியா இந்த தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் ஆப்சென்ட் ஆனது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து மத்திய அரசுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன
 
இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் கோரிக்கை ஏற்று தான் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய பிரதமர் மோடியிடம் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டுதான் இந்திய வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆனதாகவும் கூறப்படுகிறது 
 
வாக்கெடுப்பு புறக்கணிப்பால் இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுக்க வேண்டும் என்ற கோத்தபயாவின் கோரிக்கையை மோடி அரசு ஏற்றுக்கொண்டுள்ளது இலங்கை தமிழர்களுக்கு செய்த துரோகம் என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்