இங்கிலாந்துக்கு எதிராகக் கலக்கிய பேட்ஸ்மேன் இவர்தான்…. சச்சினுக்கே மூன்றாம் இடம்தான்!

Last Updated: செவ்வாய், 23 மார்ச் 2021 (12:47 IST)

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனிதான் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் டி 20 தொடரையும் முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் இன்று புனேவில் முதல் ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இப்போது விளையாடி வரும் வீரர்கள் யாருமே இல்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இங்கிலாந்துக்கு எதிராக 1546 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த யுவ்ராஜ் 1523 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் சச்சின் 1455 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்திலும் உள்ளார்.
கேப்டன் விராட் கோலி இப்போது வரை இங்கிலாந்துக்கு எதிராக 1178 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் விரைவில் மற்ற அனைவரையும் முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மேலும் படிக்கவும் :