தொடர்புடைய செய்திகள்
- ஆம் ஆத்மி போன்று அதிமுகவும் 3வது முறையாக ஆட்சி அமைக்குமா? திருமாவளவன்
- பிரசாந்த் கிஷோர் சொன்ன ஒரே அட்வைஸ்: 3வது முறை கெஜ்ரிவால் சிஎம்!!
- இதுமட்டும் நடந்திருந்தால் டெல்லியில் பாஜகவுக்கு 44 சீட்: சொன்னது யார் தெரியுமா?
- சட்ட மன்ற தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு !
- சிங்கில் டிஜிட் சக்சஸ்: வீணாய் போன அமித்ஷாவின் ராஜ தந்திரங்கள்?
ஆம் ஆத்மி ஜெயித்தது முஸ்லிம்கள் ஓட்டுக்களாலா? பரபரப்பு தகவல்
ஆம் ஆத்மி ஜெய்யித்தது முஸ்லிம்கள் ஓட்டுக்களாலா?
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் ஓட்டு தான் என்றும், முஸ்லிம்களில் 94% பேர் வாக்களித்திருப்பதாகவும், 6% பேர் மட்டுமே வாக்களிக்கவில்லை என்றும், வாக்களித்த 94% முஸ்லீம் மக்களும் ஒட்டுமொத்தமாக ஆம் ஆத்மி கட்சிக்கு தான் வாக்களித்திருந்தார்கள் என்றும் தனியார் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு ஒன்றில் தகவல் வெளிவந்துள்ளது
ஆனால் இந்துக்கள் வாக்குகள் டெல்லியில் 84% இருந்த போதிலும், அவர்களில் 34 சதவீத இந்துக்கள் மட்டுமே வாக்களித்ததாகவும் மீதி 50% பேர் ஓட்டே போடவில்லை என்றும் இதனால் தான் பாஜக தோல்வியடைந்ததாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துக்களை மொத்தமாக வாக்களிக்க செய்வதில் பாஜக தவறி விட்டதாகவும், அவர்களை வாக்களிக்க வைக்க பாஜக ஏதாவது செய்திருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக சமீபத்தில் அமல்படுத்திய சட்டங்களால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பாஜகவிற்கு எதிராக வாக்களித்ததால் தான் டெல்லியில் தேர்தல் முடிவு ஆம் ஆத்மி சாதகமாக வந்துள்ளதாகவும் பாஜக இன்னும் தீவிரமாக இந்துக்களிடையே பிரச்சாரத்தை செய்து இருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது
