வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2020 (08:21 IST)

முதல்வரிடம் தரவேண்டிய மனுவை மத்திய அமைச்சரிடம் தந்தாரா தமிழச்சி தங்கபாண்டியன்? பரபரப்பு தகவல்

முதல்வரிடம் தரவேண்டிய மனுவை மத்திய அமைச்சரிடம் தந்தாரா
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தரவேண்டிய மனுவை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை கீழ் இயங்கிவரும் 5 சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் சமீபத்தில் மத்திய நெடுஞ்சாலை அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
 
தமிழகத்தில் உள்ள பெருங்குடி, ஒக்கியம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், உத்தண்டி ஆகிய இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் இதனால் சாலையை கடக்கும் பயணிகளின் நேரம் வீணாகிறது என்றும், அதனால் இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவரிடம் கொடுத்துள்ளார்
 
ஆனால் உண்மையில் இந்த ஐந்து சுங்கச்சாவடிகளும் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இருப்பதாகவும் அதற்குரிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறப்படுகிறது. இந்த மனுவை அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுப்பதற்கு பதிலாக மத்திய அமைச்சரிடம் கொடுத்துள்ளதாகவும், இந்த மனுவை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம், மாநில நெடுஞ்சாலை துறைக்க்கு அனுப்பியுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
அதுமட்டுமின்றி மேற்கண்ட ஐந்து நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைந்தது திமுக ஆட்சியில் தான் என்றும் அது கூட தெரியாமல் தமிழச்சி தங்கபாண்டியன் தங்களது கட்சியின் நடவடிக்கைக்கு எதிராகவே அவர் மனு கொடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது