ஆதார் வேண்டாம் சரி, அப்போ இதுவர லிங்க் பண்ணத என்ன பண்றது?
ஆதார் அட்டை எண் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இன்று அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஆதாரம் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை அனைத்திற்கும் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், ஆதார் குறித்த பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாக இருந்தது. எனவே, ஆதாரை காரணம் காட்டி அரசு சலுகைகள் மறுக்கப்பட கூடாது, தனியார் நிறுவனக்களின் கையில் ஆதார் விவரங்கள் செல்லக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி இன்று வெளியான தீர்ப்பில், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும். அதே சமயம் ஆதார் இல்லை என்பதற்காக அரசின் சலுகைகளை யாருக்கும் மறுக்கக்கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது ஆதார் கட்டாமில்லை என கூறப்பட்டுள்ளதை அடுத்து இதற்கு முன்னர் ஆதார் கட்டாயம் என கூறப்பட்டபோது, பல இடங்களில் ஆதார் லிங்க் செய்யப்பட்டது. இதனை தற்போது திரும்பப்பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கும் உச்ச நீதிமன்றம் பதில் அளித்துள்ளது. அதன்படி, இன்னும் 6 மாதத்திற்குள் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஆதார் தொடர்பான சேகரிக்கப்பட்ட தகவல்களை அழித்துவிட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.