1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (12:51 IST)

ஆதார் செல்லும்! ஆனால் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை எண் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் மிக நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆதார் குறித்த இறுதி தீர்ப்பு இன்று மூன்று நீதிபதிகளால் வாசிக்கப்பட்டது.

 
இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரங்கள் பின்வருமாறு:
 
அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் . அதே சமயம் ஆதார் இல்லை என்பதற்காக அரசின் சலுகைகளை யாருக்கும் மறுக்கக்கூடாது.
 
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், தொலைபேசி, செல்போன், இணைப்பு பெறுவதற்கும், வங்கிகளில் கணக்கு தொடங்கவும், மாணவர்கள் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கும் ஆதாரை காரணம் காட்டி இவற்றை மறுக்க கூடாது .
 
கல்வி ,சிபிஎஸ்சி பள்ளிகளில் சேர்வதற்கும், நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கும்,தொழில்நுட்பத் தேவைக்காக  ஆதாரைக் காரணம் காட்டி எந்த அடிப்படை உரிமைகளும் மக்களுக்கு கிடைக்காமல் இருக்க கூடாது.
 
வருமான வரிகணக்கு தாக்கல் செய்ய பான் எண்ணுடன், ஆதரை இணைப்பது கட்டாயமாகும். 
 
அதேசமயம் யுஜிசி போன்ற படிப்புகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும். பயோமெட்ரிக் முறையில் ஆதார் எண்ணை பதிவிடச்  செய்வதில் கட்டாயமாக்கூடாது .தகவல்களை பாதுகாப்பாக சேமித்துக்கொள்ள வேண்டி மேற்கண்ட அடிப்படை உரிமைகள் எதனையும் இல்லாமல் செய்யக்கூடாது.
 
தேசத்தில் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை எனவே ஆதாரைக் காரணம் காட்டி இந்த உரிமைகளின் எதனையும் மறுக்கக்கூடாது .
 
இந்த ஆதார் முறையில் தகவல் சேகரிக்கும் போது ஒவ்வொரு தனி மனிதனின் குறித்த தகவல்களை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் தனி நபரின் கண்ணியம் காக்கப்படுவது மிகவும் முக்கியம் என்று மூன்று நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர், நீதிபதி ஏ.கே.சிக்ரி  ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினார்கள்.
 
மேலும், இரு நீதிபதிகளின் தீர்ப்பு இனிமேல் தான் வாசிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகுதான் எந்த எந்த விஷயங்களுக்கெல்லாம் ஆதார் முறைப்படுத்தப்படும் என்று நீதிமன்றத்தின்  இறுதி நகல்கள் வெளிவந்த பிறகே தெரியவரும்.