1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (14:06 IST)

பாதுகாப்பு எதிரொலி: மேற்கு வங்கம் 2 மாநிலங்களாக பிரிக்கப்படுகிறதா?

Mamtha Banerjy
வங்கதேசத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து மேற்கு வங்க மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதில் ஒன்று யூனியன் பிரதேசமாக மாற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்காளதேசத்தின் எல்லையில் உள்ள மேற்கு வங்க பகுதிகளை தனி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமாக பிரித்து அது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

அப்போதுதான் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவும் முயற்சி தடுக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதற்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார்

மேற்கு வங்க மாநிலத்தை பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்ப்போம் என்று அவர் கூறியுள்ள நிலையில் மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்திர அதிகாரி வங்கதேசத்திலிருந்து ஒரு கோடி பேர் மேற்கு வங்காளத்திற்கு நுழைவார்கள் என்றும் அது ஆபத்தானது என்றும் எனவே மேற்கு வங்காளத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே மேற்கு வங்க மாநிலத்தின் பாதுகாப்பை கருதி, அம்மாநிலம் இரண்டாவது பிரித்து அதில் ஒன்றை யூனியன் பிரதேசம் ஆக்கி மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்பாடு இது உள்ளது.

Edited by Mahendran