1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (14:05 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது தினந்தோறும் 15 ஆயிரம் வீதம் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதால் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் கொரோனா வைரஸ் பாமர மக்களை மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களையும் அவ்வப்போது தாக்கி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவிலேயே முதல் முதலாக ஒரு எம்எல்ஏ கொரோனாவால் உயிரிழந்தது ஜெ.அன்பழகன் என்பவர் தான் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் கோஷ் என்பவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதனை அடுத்து அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் கோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு எம்எல்ஏ கொரோனாவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது