சென்னையில் கொரோனா அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும்: எம்ஜிஆர் பல்கலையின் ஆய்வு
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேல் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆனால் சற்று முன் வெளியான எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவின்படி சென்னையில் கொரோனா வைரஸ் அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி தமிழகத்தின் கொரனோ வைரஸ் பாதிப்பு அடுத்த மாதம் 2.7 லட்சமாக உயரும் என்றும் அதில் 60% சென்னையை சேர்ந்தவர்கள் தான் இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு, கொரோனாவின் உச்சநிலையின் வேகத்தை குறைக்க வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது