1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (20:08 IST)

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பால் பரபரப்பு

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பால் பரபரப்பு
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் சற்று முன் மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதேபோல் இந்தியாவில் உள்ள வேறு சில மாநிலங்களும் விரைவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது